Wednesday, November 19, 2008

470a. வில்லத்தனத்தில் ஒரு சகாப்தம் - மஞ்சேரி நாராயண் நம்பியார்

தமிழ் சினிமாவின் "முதல்" & GRANDEST வில்லன் (நம்மாழ்வரை முதலாழ்வார் என்றழைப்பது போல!) எம்.என்.நம்பியார் இன்று காலமானார்.  அன்னாருக்கு வயது 89. 

அவர் இறந்த சேதியை டிவிட்டரில்  வாசித்தவுடன் ஒரு சோகம் தாக்கியது.  என்ன மாதிரி நடிகர், வில்லனாக எம்ஜியார் சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி, கமல்(குரு!), ரஜினி என்று எண்ணிலடங்கா கதாநாயகர்களுக்கு வில்லனாக பல திரைப்படங்களில் பரிமளித்தவர் MN நம்பியார்.  கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்தவர்.  சபரி மலைக்கு 65 தடவை சென்றதால், மகா குருசாமி என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர்.  நிஜ வாழ்வில் மகா யோக்கியர், மகா யோகி !

இந்த சேதி கேட்டவுடன் 2 விசயங்கள் சட்டென்று நினைவில் பளீரிட்டது.  பாக்கியராஜின் தூறல் நின்னுப்
போச்சு படத்தில் அவரது நடிப்பு செம கலக்கலான நடிப்பும், எம்ஜிஆரிடம் ஒரு மூதாட்டி "ராசா
நம்பியாரிடம் ஜாக்கிரதையாய் இருந்துகொள்" என்றதும் (சுரதாவும் இதை டிவிட்டரில் சொன்னார்!!!).

ஆழ்ந்த அஞ்சலியும், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும் !  ஐயப்பனுக்கு அருகேயே சென்று
விட்டார் அவர் !

எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

வாழவந்தான் said...

திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் ஹீரோவாகவும் வாழ்ந்தவர் திரு நம்பியார் அவர்கள்

said...

மர்மயோகியில் நகைச்சுவையாளர் வேடத்தில் வருவார்.

எப்படி வில்லனானார் என்பது புதிர்

suratha

ச.சங்கர் said...

வில்லனாக "நல்ல பெயர்" எடுத்திருந்தாலும் அவர் அனைத்து வித கதாபாத்திரங்களிலும் பரிமளிக்கக்கூடியவர் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்

ச.சங்கர் said...

வில்லனாக "நல்ல பெயர்" எடுத்திருந்தாலும் அவர் அனைத்து வித கதாபாத்திரங்களிலும் பரிமளிக்கக்கூடியவர் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails